E-paper   |   Sitemap   |   RSS
மே 30,2010,00:00

கோவையின் மின் தேவை ஆயிரத்து 450 மெகாவாட். ஆனால் 250 மெகாவாட் பற்றாக்குறையாக இருப்பதால் அவ்வப்போது மின் தடை செய்யப்படுகிறது. செம்மொழி மாநாட்டில் எவ்வித மின் தடையும் ஏற்படமால் இருப்பதற்காக கோவை மின்வாரியத்தின் சார்பில் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று கூடுதலாக 400 மெகாவாட் மின்சாரத்தை கோவைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு பணிகளுக்கு வழங்கியது போக, கோவை மற்றும் கோவை புறநகர்பகுதியில் உள்ள சுற்றுலா மையங்களுக்கும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும். வரும் மின்சாரத்தை பகிர்ந்தளிக்க கொடிசியா வளாகத்தில் மட்டும் 24 க்கும் மேற்பட்ட 500 கே.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. இது தவிர சில இடங்களில் 250 கே.வி.ஏ., திறன் கொண்ட 24 டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவையில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு, செம்மொழி மாநாட்டின் பெயரில் ஜூன் 2 ம் தேதியிலிருந்து ரத்து செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். எப்படியோ கோவை வாசிகளுக்கு மாநாட்டின் பெயரில் மின் வெட்டு இல்லாமலிருந்தால் சந்தோஷம் தான் என்கின்றனர் பொதுமக்கள்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »