E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஏந்தல் மங்கலங்கிழார்
மே 30,2010,00:00

மங்கலங்கிழாருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் குப்புசாமி. தமிழின் இலக்கிய இலக்கணங்களில் வித்தகமும், வேதாந்தத்தில் துல்லிய அறிவும் பெற்றிருந்ததால் திரு.வி.க.,போன்ற அறிஞர்கள் அவரை வித்தியானந்தர் என்பர். சசங்க இலக்கியங்களைக் கசடறக் கற்ற தாக்கத்தால், குப்புசாமி என்ற தன்பெயரை தாமாகவே 'மங்கலங்கிழார்' என மாற்றிக் கொண்டார். 'இமைப் போதும் தமிழ் மறவார்; இயன்ற தொண்டை இனிதாற்றும் அருளுள்ளம் உடையார்;' என மங்கலங்கிழாரைப் பாராட்டினார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழுணர்வையும், தமிழ்க் கல்வியையும் நாடெங்கும் பரப்பும் நோக்கில் தமிழ்ச் சங்கம் அமைத்து, நற்றமிழ்த் தொண்டாற்றினார். 'சந்திரகுப்த சாணக்கியர்' என்ற திரைப்படத்தில் சாணக்கியராக நடித்த அவர், தமக்கு கிடைத்த வருமானத்தைப் பள்ளிக் கட்டடங்களாக உருவாக்கினார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »