E-paper   |   Sitemap   |   RSS
மே 28,2010,00:00

செம்மொழி மாநாட்டுக்காக, கோவையில் நிரந்தர கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தவில்லை என்று முணுமுணுப்புகள் ஒரு புறம்; ஐந்து நாட்கள் மாநாட்டால் கோவையே சொர்க்கபுரியாகிக் கொண்டிருக்கிறது என்று பெருமிதப்படுவோர் மறுபுறம். இரண்டிலுமே கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் குறைகள் சொன்னாலும், இந்த செம்மொழி மாநாட்டால் கோவைக்கு பல நன்மைகள் கிடைத்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சியினரும் மறுக்க முடியாது. இந்த மாநாடு நடக்காமல் இருந்திருந்தால்...கோவைக்கு செம்மொழிப் பூங்கா வருமென்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்காது. புதிய சாலைகள், புதிய நடைபாதைகள், புதிய விளக்குகள், புதை மின் வடம் என எதுவும் கிடைத்திருக்காது. மாநாட்டுக்காக கோவைக்கு அரசு செய்தது இருக்கட்டும்; பல லட்சம் தமிழர்கள் குவியப்போகும் மாநாட்டுக்காக கோவை மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?. செய்வதற்கு நிறைய இருக்கின்றன. வணிக நிறுவனங்கள், கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்கு வர்ணம் பூசி, மின் விளக்குகளால் அலங்கரிக்கலாம். அரசு அமைத்துள்ள நடைபாதையை, நடைபாதை பூங்காவைப் பராமரிக்கலாம். செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி வழங்கலாம். பொது மக்கள், தங்கள் உறவுகளை அழைத்து வந்து, மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க வைக்கலாம். கல்வி நிறுவனங்கள், தங்கள் மாணவ, மாணவியரை முழுதாக மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அறிவுறுத்தலாம். இன்னும் நிறைய இருக்கின்றன. நாடு நமக்குச் செய்தது இருக்கட்டும்; நாட்டுக்காக நாம் என்ன செய்யவிருக்கிறோம்?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »