E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 21,2010,00:00

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகருக்குள், எந்த திசையில் உள்ளே நுழைந்தாலும் சேர, சோழ, பாண்டியர்களின் நுழைவாயில்களே வரவேற்றன. உற்சாகமாய் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் உன்னத நினைவுச் சின்னங்கள் அவை. காலம் மாறிப்போனது. தமிழ் இன்றைக்கு செம்மொழி என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது; அதற்காக எடுக்கப்படும் விழா தான், இந்த செம்மொழி மாநாடு.

அன்று, சாலைகள் சிறிதாக இருந்தன; நுழைவாயில்கள் பிரமாண்டமாய்த் தெரிந்தன. அதிகரித்து வரும் வாகனப்பெருக்கத்தால், சாலைகள் விரிவடைகின்றன; நுழைவாயில்கள் தடையாய்த் தெரிகின்றன. எதிர்காலத்தில் இத்தகைய எண்ணங்கள் தோன்றி விடக்கூடாது என்பதற்காக, இந்த மாநாட்டின் நினைவை பசுமையாக எல்லோர் மனத்திலும் பதிக்கும் முயற்சி தான், செம்மொழி மாநாட்டுப் பூங்கா. கோவை நகரின் மத்தியில் 165 ஏக்கரில் பரந்திருக்கிறது மத்திய சிறைச்சாலை மைதானம், விரைவில் செம்மொழி மாநாட்டுப் பூங்காவாகிறது. முதலில் 50 ஏக்கரில் பூங்கா அமைப்பதற்கான, ஆயத்தப்பணிக்காக 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 43 ஏக்கரில் அமைந்துள்ள பழைய குடியிருப்புகளை இடித்து, அங்கும் பூங்கா விரிவுபடுத்தப்படும். இதற்கான நில அளவைப் பணியை தமிழக அரசின் 'அடையாறு பூங்கா அறக்கட்டளை' மேற்கொண்டுள்ளது. விரைவில் 'செம்மொழி பூங்கா அறக்கட்டளை' துவங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சில ஆண்டுகளில், தேசத்தின் பெரிய பூங்கா கோவையில் அமையும்; இந்த மாநாட்டின் நினைவு, பல நூற்றாண்டுகளுக்கு பசுமையாய் நிலைக்கும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »