E-paper   |   Sitemap   |   RSS
மே 27,2010,00:00

முதல்வர் வருவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் செம்மொழி மாநாட்டுப் பணிகளின் வேகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இதே வேகம் தொடர்ந்தால் மட்டுமே, பணிகளை விரைவாக முடிக்க முடியும். ஜூன் முதல் தேதியிலிருந்து பல்வேறு குழுக்களின் தலைவராக இருக்கும் அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பலரும், கோவையில் தங்கி, பணிகளை தினமும் பார்வையிடும்பட்சத்தில், இந்தப் பணிகள் இன்னும் வேகமாகவும், தரமாகவும் நடக்கும் என்று நம்பலாம். அனைத்து அமைச்சர்களையும் வரவேற்கும், கோவை மக்களின் ஒரு கோரிக்கை. அமைச்சர்கள் இங்கே தங்கவிருக்கும் நாட்களில், அவர்கள் தினமும் ஓரிடத்தில் ஆய்வு செய்யலாம். அவர்களுக்காக, வாகனங்கள் நிறுத்தப்படலாம். அவிநாசி சாலையில் 10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தினால், பல நூறு வாகனங்கள் தேங்கி விடும். தினமும் பல அமைச்சர்களுக்காக வாகனங்களை நிறுத்தினால்...அவ்வளவுதான். எந்த அமைச்சர் வந்தாலும், எவ்வளவு அவசரம் என்றாலும் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது. அப்போதுதான், கோவை மக்கள் தினமும் படும் அவதிகள் புரியும்; இந்த தினசரி திண்டாட்டத்துக்கு தீர்வு கிடைக்கும். கவனிப்பாரா முதல்வர்?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »