E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.வரதராசனார்
மே 27,2010,00:00

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வானில் ஒளி வீசியவர் மு.வரதராசனார் (1912-1974). 1948ம் ஆண்டு 'சங்க இலக்கியங்களில் இயற்கை' என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த் துறையில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர் தான். மு.வ., தொடாத துறைகளே இல்லை எனலாம். நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, இலக்கியம், மொழியியல், வாழ்க்கை வரலாறு ஆகிய அனைத்து துறைகளிலும் கோலோச்சியவர். இவர் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலும், 'அகல் விளக்கு' என்னும் நாவலும் 'சாகித்ய அகாடமி' விருது பெற்றவை. 'கள்ளோ காவியமோ', 'அரசியல் அலைகள்', 'மொழியியற் கட்டுரைகள்' இவை மூன்றும் அரசு பரிசு பெற்றவை. 1972ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஊஸ்டர் பல்கலைக்கழகம் மு.வ., அவர்களின் இலக்கியத் திறனைப் பாராட்டி 'இலக்கியப் பேரறிஞர்' என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தது.





மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »