E-paper   |   Sitemap   |   RSS
மே 26,2010,00:00

செம்மொழி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தவேண்டுமென்றுதான், பல நூறு கோடி ரூபாயை அள்ளித்தந்திருக்கிறது அரசு. ஆனால், அந்த தொகையை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று தெரியாமல், காசைக் கரைத்துக் கொண்டு இருக்கிறது கோவை மாநகராட்சி நிர்வாகம்.யாருமே யோசிக்காத வகையில், எங்குமே இல்லாதது போல, கோவையில் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, நடைபாதைப் பூங்காக்களை அமைத்தது, இந்த கோவை மாநகராட்சியின் சாதனை. ஆனால், மாநாடு துவங்குவதற்கு முன்பே, அந்த நடைபாதை பூங்காக்களின் புற்களும், செடிகளும் காய்ந்து கிடப்பதுதான் வேதனை.இதை விடக் கொடுமை, புதிதாக அமைக்கப்படும் நடைபாதைகளின் நிலை. பல இடங்களில் இன்னும் வேலையே துவங்கவில்லை. பல இடங்களில் முடிந்தும் மக்கள் நடக்க முடியவில்லை. கோவை மாநகராட்சிப் பொறியாளர்களின் திறமையின்மை, மெத்தனம் மற்றும் ஊழல் போக்கின் மொத்த வெளிப்பாடுதான் இது.இணைப்புச் சாலைகள் இன்னும் முடியவில்லை; பழைய பூங்காக்களில் புதிய பெயர்ப்பலகைகள் வைத்து, கணக்குக் காட்டியிருக்கிறார்கள். மாநகராட்சி போடும் சாலைகளின் தரமோ, சொல்ல வார்த்தையில்லை. துணை முதல்வர் அதிருப்தி தெரிவித்தது போதாது; அதிரடியில் இறங்கினால் மட்டுமே செம்மொழி மாநாடு சிறக்கும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »