E-paper   |   Sitemap   |   RSS
மே 25,2010,00:00

செம்மொழி மாநாட்டிற்கு வரும் பிரமுகர்களுக்கு தேவையான கார் மற்றும் மேக்சிகேப் வாகனங்கள் அனைத்தையும் போக்குவரத்துத் துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்கு அனுமதி பெற்றவர்களை அழைத்து வருவதற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்களது இருப்பிடத்திற்கு அழைத்து செசல்லவும் கோவையில் இயங்கும் 40 மினிபஸ்களை இயக்க போக்குவரத்து துறையினர் முடிவு செய்துள்ளனர்.செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியை மினிபஸ்கள் சென்றடையும். அங்கிருந்து செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்கான அனுமதி மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களை மட்டும் கொடிசியா அரங்கிற்கு அழைத்துச் செசல்வர். இதற்காக தற்போதே மினிபஸ் உரிமையாளர்கள் வாகனத்தை சரிசெய்து நல்ல நிலையில் வைத்திருக்கின்றனர். தேர்வு செய்யப்பட்ட 40 மினிபஸ்களையும் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்து, ஆவணங்களை சரி பார்த்து, அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »