E-paper   |   Sitemap   |   RSS
மே 24,2010,00:00

உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது, உபசரிப்பது, மாநாட்டு நிகழ்விடங்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கென பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட 4,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநாட்டையொட்டி நடைபெறும் தமிழ் கலாச்சார ஊர்வலங்களிலும் இம்மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாநாடு நடைபெறும் நாட்களில் மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் பள்ளி மாணவர்களின் பிஞ்சு பாதங்களுக்கு வேதனைதான். 8 கி.மீ., தூரம் மாநாட்டு பேரணியில் நடந்து செல்ல வேண்டியதிருக்கும். இது குறித்து ஆலோசித்த அரசு, மாநாட்டில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பை தவிர்க்க புத்திசாலித்தனமாக உத்தரவிட்டுள்ளது, ஆறுதலான விஷயம். அத்துடன் மாநாட்டையொட்டி, கோவை பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை என்பதையும் அரசு விரைவில் அறிவித்தால், அதற்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் தங்கள் பாட திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »