E-paper   |   Sitemap   |   RSS
மே 23,2010,00:00

கட்டாயத் தமிழ் என்பது பள்ளிகளுக்கு அரசு தந்துள்ள உத்தரவு; கட்டாய ஆங்கிலம் என்பது மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகங்கள் பிறப்பித்துள்ள கட்டளை. தமிழ் வகுப்பைத் தவிர, பள்ளி வளாகத்துக்குள் தப்பித் தவறி தமிழ் பேசி விட்டாலும், தனியாக தண்டனை காத்திருக்கும்; அதுவும் அபராதமாகக் கூட இருக்கலாம். தமிழ்நாட்டுக்குள் உள்ள ஒரு பள்ளிக்குள் தமிழ் பேச சுதந்திரம் இல்லை என்பது, எத்துணை கொடுமை?. மொழியறிவை வளர்ப்பதாகக் கூறி, ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் விதிக்கும் நிபந்தனைகள், தமிழ்க் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை அன்னை மொழியாக்கி, தாய்த்தமிழை அந்நியமாக்கிக் கொண்டிருக்கின்றன. கட்டாயத் தமிழ், சமச்சீர் கல்வி என பல உத்தரவுகளைப் பிறப்பித்து, தமிழையும், தமிழ் மக்களையும் காப்பாற்றி வரும் தமிழக அரசுதான், இப்போது செம்மொழிச் சிறப்பு பெற்ற தமிழுக்கு மாநாடு எடுத்து மக்களை குளிர்விக்கப்போகிறது. அப்படியே, தனியார் பள்ளிகளுக்குள்ளும் தமிழை சுதந்திரமாய் வலம் வரச்செய்தால்...தலை வணங்கலாம்!



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »