E-paper   |   Sitemap   |   RSS
மே 22,2010,00:00

என்னதான் இது அரசு நடத்துகிற மாநாடாக இருந்தாலும், உடன் பிறப்புகளுக்கு இது ஓர் உற்சாகப் பெருவிழாதான். முதல்வராக கருணாநிதி நடத்தும் முதல் உலகத்தமிழ் மாநாடாகத்தான் இதை கழகக் கண்மணிகள் காண்கிறார்கள். அதனால், மாநாட்டை அமர்க்களப்படுத்த அவர்களும் ஆயத்தமாகி வருகிறார்கள்.
மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட வரும் முதல்வரை எப்படி வரவேற்பது என்று கூட்டம் போட்டு ஆலோசித்திருக்கிறார்கள் கோவை தி.மு.க.,வினர். புதிதாக போட்ட சாலைகளில் குழி தோண்டக்கூடாது, விளம்பரங்களில் தலைவர்கள் படம் மட்டுமே இடம் பெயர வேண்டும்...இப்படி பல அன்புக்கட்டளைகள் பிறப்பித்திருக்கிறார் கட்சியின் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி.
பாராட்டுதலுக்குரிய பரிந்துரை. இதேபோல, உடன் பிறப்புகளுக்கு உரிமையுடன் மேலும் சில உத்தரவுகளைப் போடலாம். கண்ட இடங்களில் எல்லாம் கட்சிக்கொடியை பறக்க விடுவது, தோரணங்களை தொங்க விடுவது, பிரமாண்ட பேனர்களில் மிரட்டுவது போன்றவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கலாம்.
மக்களையும், முதல்வரையும் ஒரு சேரக் கவரும் வகையில் திருக்குறள், பாரதியார் கவிதை, தமிழ் அகராதி, அண்ணாதுரை, கருணாநிதி, ஈ.வெ.ரா.,வின் புத்தகங்களை பொது மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அசத்தலாம்.
அப்படிச் செய்தால், அது வெறும் விளம்பரமாக முடிந்து விடாமல், காலங்களை கடந்த சரித்திரமாக நிலைத்திருக்கும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »