E-paper   |   Sitemap   |   RSS
மே 21,2010,00:00

முதல்வர் கருணாநிதி, வரும் 24ம் தேதி முதல் 3 நாட்கள் கோவையில் தங்கி, மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவுள்ளதாக அலுவலக வட்டாரங்களில் பேச்சு. துணை முதல்வரும், அமைச்சர்களும் கோவையிலேயே ஒரு மாதம் முகாமிட்டு, பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல். தமிழுக்கு இந்த மண்ணில் மாநாடு எடுக்கப்படுவதால், மக்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றால், இதன் பொருட்டு அரசின் தலைமையிடமே தற்காலிகமாக இங்கே மாறுவதில் இன்னும் ஓர் எதிர்பார்ப்பு. அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து இங்கு தங்கும்போது, கோவையின் தேவைகளை அவர்கள் உணரும் வாய்ப்புண்டு. மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடும் அதே நேரத்தில், அமைச்சர்கள் எல்லோரும் அவரவர் சார்ந்த துறைகளின் மீது ஆய்வு நடத்தினால் இந்த தேவை புலப்படும். உதாரணமாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு மருத்துவமனையில் அதிரடி சோதனை நடத்தினால், அங்கே இருக்கும் அவலம் புரியும். வீட்டு வசதித்துறை அமைச்சர், அரசு அலுவலர் குடியிருப்பு வீதிகளில் வலம் வந்தால் அங்குள்ள ஆபத்து தெரியும். உள்ளாட்சியை கவனிக்கும் துணை முதல்வர், இங்கே நடக்கும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டப் பணிகளை உற்று நோக்கினால், அவை என்ன வேகத்தில் நடக்கிறது என்று தெரியவரும். போலீசிடம் சொல்லாமல், போக்குவரத்தை நிறுத்தாமல் அமைச்சர்கள் நகர் வலம் வந்தால் ஆயிரம் அவலங்கள் அம்பலமாகும். அதனால், உடனடி தீர்வு காணா விட்டாலும், உள்ளத்தில் ஒரு நெருடலை உருவாக்கி, என்றைக்கோ அது செயல் வடிவமாகும். அப்படியாவது, மக்கள் மனதை அறிவார்களா மாண்புமிகுக்கள்?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »