E-paper   |   Sitemap   |   RSS
மே 20,2010,00:00

மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட முதல்வர் கருணாநிதி வருவதே, மாநாடு துவங்குவதற்கு இணையான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் மே 24ல் வருகிறார்; அதற்கு முதல் நாளே துணை முதல்வர் ஸ்டாலின் வந்து, முதல்வர் பார்வையிட வேண்டிய இடங்களை ஆய்வு செய்யவுள்ளார். அதனால், மாநாடுக்கு ஒத்திகை நடப்பது போல, அரசுத்துறை அலுவலர்கள் பறந்து பறந்து பணியாற்றுகின்றனர்., கோவைக்கு முதல்வர் வரும்போதே, தமிழறிஞர்கள், பேராளர்கள் பலரையும் வரவழைத்து, ஆய்வரங்கம் குறித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பும் பணி நடக்கிறது. முதல்வர் நேரடியாகப்பார்க்கும் இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் நடக்கும் பணிகள் குறித்து முதல்வருக்கு விளக்க வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இந்த சூழலில் முதல்வர் வருவது, பணிகளை மேலும் துரிதப்படுத்த நிச்சயம் உதவும். முதல்வர் வந்து சென்றபின், இப்போது செய்து வரும் பணிகளை விரைவாக முடிக்கவும், அரை குறையாகச் செய்த பணிகளை முழுமைப்படுத்தவும் முயற்சிகள் நடக்கும். அப்படியே, மிக மோசமான தரத்தில் நடந்துள்ள பணிகளையும் மறு ஆய்வு செய்து, தவறுகளைத் திருத்திக்கொண்டால் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »