E-paper   |   Sitemap   |   RSS
மே 19,2010,00:00

கோடி கோடியாக அந்நியச் செலாவணியையும், பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கும் கோவைக்கு, எல்லாமே பற்றாக்குறை தான். கோவையில் இருந்து எந்த ஊருக்கும் அவசரமாய் கிளம்பிச் சென்று விட முடியாது. அதேபோல, எந்த ஊரிலிருந்தும் உடனே திரும்பிவிட முடியாது. சென்னை, மதுரை, திருச்சி என தமிழகத்தின் எந்தப் பெரிய நகரிலிருந்தும், கோவைக்கு போதிய அளவுக்கு போக்குவரத்து வசதிகளில்லை. போதிய அளவுக்கு ரயில்களில்லை, பஸ்களில்லை என்பதெல்லாம் சாதாரண, நடுத்தர மக்களின் வருத்தம். நினைத்த நேரத்தில் கிளம்பி, சென்னைக்குப் போய்த் திரும்பி வருவதற்கு, போதுமான அளவுக்கு விமானங்கள் கூட இங்கிருந்து இயக்கப்படுவதில்லை என்பது வி.ஐ.பி.க்களின் வேதனை. கோவையிலிருந்து சென்னைக்கு ஐந்து விமானங்களும், சென்னையிலிருந்து கோவைக்கு ஒன்பது விமானங்களும் இயக்கப்படுகின்றன. ஏர் இந்தியா நிறுவனம், இப்போது தான் 'பெரிய மனது' வைத்து, வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு சென்னைக்கு விமானம் இயக்கவுள்ளது. விமானங்கள் குறைவாகவும், பயணிகள் அதிகமாகவும் இருப்பதால் தான், தனியார் விமான நிறுவனங்கள், சென்னைக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றன. செம்மொழி மாநாட்டுக்காக, சென்னையிலிருந்து ஏராளமான வி.ஐ.பி.க்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்குமே விமானத்தில் இடம் கிடைப்பது, சாதாரண விஷயமாக இல்லை. கோவைக்கு விமான சேவையை அதிகப்படுத்துவது தமிழக அரசின் கையில் இல்லை; ஆனால், தமிழக முதல்வரின் கையில் இருக்கிறது. அவர் ஒரு கடிதம் எழுதினால்...கோவையின் தேவைக்கும் மேலே கிடைக்கும் விமான சேவை.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »