E-paper   |   Sitemap   |   RSS
மே 18,2010,00:00

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு சரியாக 30 நாட்களுக்கு முன்பாக, அதாவது வரும் 24ம் தேதி கோவைக்கு வருகிறார் முதல்வர் கருணாநிதி. அவர் வரவுள்ளார் என்று தெரிந்ததுமே, பணிகளில் சற்று வேகம் தெரிகிறது. எவ்வளவு வேகமாக நடந்தாலும், சில பணிகளை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. இரவு, பகலாக வேலை பார்த்து திட்டமிட்டபடி மாநாடுக்கு முன்பாக வேலையை முடித்து விடுவோம் என்பதே அதிகாரிகள் தரும் உத்தரவாதமாக இருக்கிறது. முடித்து விடுவார்கள் என்றே நம்புவோமாக.ஆனால், கடைசி நேரத்தில் எப்படியாவது பணிகளை முடிக்க வேண்டுமென்று அவசர கதியில் வேலையைச் செய்வதால், பல பாதிப்புகள் ஏற்படுவதை இவர்கள் உணர வேண்டும். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாக்கடை பெருக்கெடுத்து ஓடுவதற்குக் காரணம், புதை மின் வடம் அமைக்க காட்டிய அவசரம்.தொலைத்தொடர்புத்துறைக்கு பாதிப்பு, மாநகராட்சிக்கு பாதிப்பு, சாலைகளை சீரமைப்பதில் பிரச்னை என பல வித சிக்கல்களும் மின் வாரியப் பணியால்தான். குறைவான காலஅவகாசத்தில், குறைவான ஆட்களை வைத்து வேலை பார்ப்பதால் ஏற்பட்ட பிரச்னை இது.இப்படி அரை குறையாகப் பணிகளைச் செய்வதால், பல ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. ஆய்வுக்கு வரும் முதல்வருக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள் மின் வாரிய அதிகாரிகள்?.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »