E-paper   |   Sitemap   |   RSS
மே 17,2010,00:00

'இதற்கு முன்பாக நடந்த எல்லா உலகத்தமிழ் மாநாடுகளையும் மிஞ்சும்' என்றார் மூத்த அமைச்சர் அன்பழகன். 'அந்த மாநாடுகளை விட, இந்த செம்மொழி மாநாடு பிரமிக்க வைக்கும்' என்கிறார் அமைச்சர் துரைமுருகன். அதற்கேற்பத்தான் ஏற்பாடுகள் எல்லாமே நடக்கின்றன.கொடிசியா வளாகத்துக்குள் மட்டுமே கோடிக்கணக்கான ரூபாய்க்கு பணி நடக்கிறது. மாநாட்டுப் பந்தல் மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்கும் இடங்களை சமப்படுத்தி மண்ணால் நிரப்பவே இரண்டே கால் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கொடிசியா ரோடும் புதுப்பிக்கப்பட்டு, புதிய விளக்குகள் அமைக்கப்படவுள்ளன.'இவை எல்லாமே தேவை தானே' என்று எல்லோரும் கேட்கலாம். கண்டிப்பாக இந்த ஏற்பாடுகள் எல்லாம் தேவை தான். ஆனால், இத்தனை கோடி ரூபாய் கொட்டப்படும் இந்த இடங்கள் எதுவுமே, அரசுக்குச் சொந்தமானதில்லை. மாநாடு முடிந்தபின், இந்த இடங்களிலிருந்து ஒரு துரும்பைக் கூட அரசு எடுத்துக்கொண்டு போக முடியாது.எப்படியோ, மாநாட்டின் பெயரில் ஊர் முன்னேறுவதில் மக்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால், அதே மக்களுக்கு சின்னதாய் ஒரு நெருடல் இருக்கிறது. இதற்கு செலவழித்த தொகையைப் போல கொஞ்சம் நிதி ஒதுக்கியிருந்தால், கோவை கலெக்டருக்கு புதிய அலுவலகம் கட்டியிருக்கலாம்.அரசு அலுவலர் குடியிருப்புகளுக்கு காத்திருக்கும் ஆபத்தை நீக்கியிருக்கலாம். பஸ்ஸ்டாண்டை பெரிதாக்கியிருக்கலாம். மாநாட்டின் நினைவாக ஒன்றிரண்டு பாலங்களையாவது கட்ட ஆரம்பித்திருக்கலாம். இப்போதும் கூட, இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்; முதல்வர் வரும்போது இதையெல்லாம் அறிவிப்பாரென்று.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »