E-paper   |   Sitemap   |   RSS
மே 16,2010,00:00

அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, தினமும் 3 மணி நேரம்தான். ஆனால், எப்போது வரும், போகுமென்றெல்லாம் யாருக்கும் தெரியாது. சில பகுதிகளில் 6 மணி நேரம் என்கிறார்கள்; சில பகுதிகளில் அதற்கு மேலே என்கிறார்கள். கோவை நகர மக்கள், இப்படியொரு கோடை துயரத்தை இதற்கு முன் அனுபவித்தது கிடையாது. தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு, மக்களுக்கு அவதி என்பதெல்லாம் விட, நகரில் முக்கியச் சாலைகள் அனைத்தும் இருளில் மூழ்கிக்கிடப்பதால், பாதுகாப்பற்ற நிலை. செம்மொழி மாநாட்டுக்கு புதை மின் வடம் அமைக்கும் பணிக்காக அவிநாசி சாலை, திருச்சி சாலை என பல சாலைகளில் மின் கம்பங்களே அகற்றப்பட்டுள்ளன.தெரு விளக்குகள் இல்லாத நிலையிலேயே இத்தனை நேரம் மின் வெட்டு. இனி, மாநாட்டுக்காக 32 உயர் மட்ட கோபுர விளக்குகள், 852 புதிய விளக்குகள், இன்னும் கொடிசியா சாலை, வ.உ.சி. பூங்கா, கொடிசியா வளாகம், மாநாட்டுப் பந்தல், அரசு அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் விளக்குகள் ஜொலிக்கப்போகின்றன.உலக அளவிலான மாநாடுக்கு, இதெல்லாம் அவசியம்தான். அதேநேரத்தில், இந்த ஆடம்பரங்களுக்காக, மாநாட்டு நாட்களில் நமது உறக்கம் முற்றிலும் பறிக்கப்படுமோ என்று அச்சப்படுகிறார்கள் கோவை மக்கள்.உலகத் தமிழ் மாநாடுக்கு ஒளி பாய்ச்ச, உள்ளூர்த் தமிழர்களை இருளில் தவிக்க விட்டு விடக்கூடாது.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »