E-paper   |   Sitemap   |   RSS
மே 15,2010,00:00

நினைத்ததுபோலவே, புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடித்து, வெற்றிகரமாக ஒரு கூட்டத்தொடரையும் நடத்தி முடித்து விட்டார் முதல்வர் கருணாநிதி. இப்போது அவரது கவனமெல்லாம், கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு மீதுதான். எத்தனை வேலை இருந்தாலும், செம்மொழி மாநாட்டுப் பணிகள் பற்றி அவர் விவாதிக்காத நாளில்லை என்கிறார்கள் அதிகாரிகள். தான் நினைத்தபடி, உலகத்தமிழ் மாநாட்டை நடத்த முடியாவிட்டாலும், இதுவரை நடந்த எல்லா உலகத்தமிழ் மாநாடுகளையும் இந்த செம்மொழி மாநாடு மிஞ்ச வேண்டுமென்பதே அவரது ஆவல்.அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலுள்ள அமைச்சர்களும், அடிக்கடி கோவைக்கு வந்து பணிகளைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள். கோவை ஆட்சியரும், பம்பரமாய்ச் சுழன்றுதான் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஊர் கூடித்தானே தேர் இழுக்க முடியும்...துறைகள் உரசிக்கொண்டிருந்தால் வேலை எப்படி நடக்கும்?. மிகக்குறுகிய காலத்தில் பெரிய வேலையைச் செய்ய ஒப்புக் கொண்டது துறை அதிகாரிகளின் தவறு. அதைச் செய்ய முடியாமல், அரைகுறையாகவும், தரமற்றும் பணிகளை மேற்கொள்வது அதை விட தவறு. இத்தனை நிர்ப்பந்தந்தத்துக்கு இடையில் பணியாற்றினால், அந்த பணிகளின் ஆயுட்காலம் எப்படியிருக்கும்?.மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட, மே 23ம் தேதி முதல்வர் கோவை வரவுள்ளார்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »