E-paper   |   Sitemap   |   RSS
மே 14,2010,00:00

'செம்மொழி மாநாட்டுப் பணிகளை போட்டி போட்டுக் கொண்டு, முடிக்க வேண்டும்' என்று இரு நாட்களுக்கு முன் சென்னையில் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார், துணை முதல்வர் ஸ்டாலின். இரு மாதங்களுக்கு முன் போடப்பட்டிருக்க வேண்டிய உத்தரவு. எங்கே தவறு, எதனால் தாமதம் என்று தெரியவில்லை; ஆனால், ஆய்வரங்கம், மாநாட்டுப் பந்தல் பணிகளைத்தவிர, செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்திலும் சுணக்கம் இருப்பது நிதர்சனம். துறை அதிகாரிகளுக்குள் இணக்கம் இல்லாததே இதற்குக் காரணம். மாநில அரசுத் துறைகளுக்கு உள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லாதபோது, மத்திய அரசுத் துறையை குறை கூற ஒன்றுமில்லை. அதனால்தான், ரயில்வே துறை செய்ய வேண்டிய, செய்வதாகக்கூறிய பல பணிகள், கிடப்பில் கிடக்கின்றன. இவை பெரும்பாலும் மாநாட்டுக்கு முன்பாக முடிவதற்கு சாத்தியமே இல்லை. மாநாடு நடக்கும் அவிநாசி சாலையில், மிகப்பெரிய நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள இடம், ஹோப் காலேஜ் பாலம் தான். அங்கே பாலம் விரிவுப்படுத்தும் பணி, 'பயணிகள் ரயில்' வேகத்தில்தான் நடக்கிறது. ரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவாயிலை அமைப்பதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. இருகூர் இரட்டை வழிப்பாதை, வடகோவை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் என, முக்கியமான பணிகளை விட்டு விட்டு, ஏற்கனவே உள்ள சுவர்களை அலங்கரிக்கும் மேற்பூச்சு வேலைகள்தான் நடக்கின்றன. ரயில் நிலையம் முன்பாக இப்போதே நெரிசல் தாளவில்லை. மாநாட்டு நாட்களில் கேட்கவே வேண்டாம். அமைச்சர்களும், சென்னையிலுள்ள அதிகாரிகளும் அவ்வப்போது பறந்து வந்து, மாநாட்டுப் பந்தலையும், ஆய்வரங்கப் பணிகளையும் பார்த்து விட்டுப் போனால் எல்லாம் நடந்து விடுமா? மாநாட்டு நாட்களில் மக்கள் அவதிப்பட்டால் பரவாயில்லை என்று நினைக்கிறார்களா, இவர்கள்?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »