E-paper   |   Sitemap   |   RSS
மே 13,2010,00:00

கற்றது தமிழ் ஆக இருந்தால், மனம் பிறழ்ந்து ஊர் ஊராய் சுற்றித் திரிய வேண்டுமென்பது, திரையில் வந்த அதீத கற்பனையாய் இருக்கலாம். ஆனால், அதிலுள்ள அடிப்படை உண்மை, மிக ஆழமானது. இன்றைக்கு தமிழ் பட்டதாரிகளாக இருப்பவர்களுக்கு ஆசிரியப் பணியை விட்டால், வேறு நாதியில்லை.அரசு உத்தரவின்படி, 6,7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் பலர், தமிழில் எம்.ஏ., எம்.எட்., மற்றும் எம்.பில்., முடித்தவர்கள். இவர்களுக்குப்பின், 15 ஆண்டுகள் கழித்து புதிதாக இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் சேரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இவர்களுக்கும் பணி முதுநிலை, பதவி உயர்வில் ஏராளமான வித்தியாசங்கள். தமிழில் உயர் கல்வி பயின்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியராக பணி உயர்வு வழங்க வேண்டுமென்பது இவர்களின் நீண்ட கால கோரிக்கை. தமிழில் எம்.பில்., முடித்ததற்கு சிறப்பு ஊதிய உயர்வு, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் என அரசு செய்ய வேண்டியவை நிறையவே இருக்கின்றன.தமிழ் மண்ணில் பிறந்து, தமிழை விரும்பிப் படித்து, துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும், தமிழைப் படித்த ஒரே காரணத்துக்காக பதவி உயர்வு கிடைக்காமலே, ஓய்வு பெற வேண்டியிருக்கிறது என்றால், எதிர்காலத்தில் யார் தமிழ் படிப்பார்கள்? அடுத்த சந்ததிக்கு யார் சொல்லிக்கொடுப்பார்கள்? தமிழுக்கு மாநாடு எடுத்தால் மட்டும் போதுமா?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »