E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 19,2010,00:00

இயல், இசை, நாடகம் என எந்த வடிவில் இருந்தாலும், தமிழின் சுவை குறைவதில்லை. ஆடலும், பாடலும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கலை வடிவங்கள். தமிழுக்கு விழா கொண்டாடும் தமிழர்களை மகிழ்விக்க, கோவையில் 3 நாட்களுக்கு 'சங்கமம்' கலை விழா நடக்கவுள்ளது.

முன்பெல்லாம் உலகத்தமிழ் மாநாடு, குறைந்த பட்சம் 10 நாட்கள் நடக்கும். அந்த நாட்களில், மாநாடு, அலங்கார வாகன ஊர்வலம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம் என ஊரெல்லாம் தமிழ் மணக்கும்; திரும்பிய திசையெல்லாம் திருவிழாக்கோலமாக இருக்கும்.

ஆனால், வினாடிகளையும் விலை பேசும் இன்றைய பரபரப்பான உலகில் 10 நாள் மாநாடெல்லாம் சாத்தியமில்லை. அதனால்தான், ஐந்தே நாட்களில் உலகத்தமிழ் மாநாடுகளை மிஞ்சும் வகையில், சகல நிகழ்ச்சிகளையும் நடத்த தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.

மாநாட்டுக்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் பல லட்சம் தமிழர்கள், பெரும் எதிர்பார்ப்போடு கொங்கு மண்ணில் கூடுவர். அவர்களை வரவேற்கும் விதமாகவும், மாநாட்டு உற்சாகத்தை உயர்த்தவும், ஜூன் 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களில் நடக்கிறது 'சங்கமம்' கலை விழா.

கோவையில், சிறைச்சாலை மைதானம், காந்தி பூங்கா, வ.உ.சி., பூங்கா, கொடிசியா, உக்கடம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 11 திறந்த வெளி மைதானங்களிலும், ஓர் உள்ளரங்கத்திலும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், மக்கள் அனைவரையும் சந்தோஷத்தில் மூழ்கடிக்கும்.

கரகாட்டம், ஒயிலாட்டம், குயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம் உட்பட தமிழ் மண்ணின் பாரம்பரியக்கலைகள் அனைத்தும் கொங்குத் தமிழ் மண்ணில் சங்கமிக்கவுள்ளன. சென்னை சங்கமத்தில் எல்லோரையும் விழி விரியச் செய்த 700க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக்கலைஞர்கள், இவற்றில் பங்கேற்று அசத்துவர்.

கொங்குச் சமையல், செட்டிநாடு சமையல், தஞ்சைச் சமையல் என தமிழ் மண்ணின் வாசம் கலந்த அனைத்து விதமான உணவுப்பொருட்களையும் ஒரே இடத்தில் சுவைக்கும் வகையில் பிரமாண்ட உணவுத் திருவிழாவும் நடக்கிறது. உங்களை பரவசப்படுத்தும் இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நுழைவு இலவசம்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »