E-paper   |   Sitemap   |   RSS
மே 12,2010,00:00

பள்ளிகளில் கட்டாயத் தமிழ் கற்கச் சொல்வதால், எங்களது தாய்மொழியைப் படிக்க முடியவில்லை என்று தமிழக சட்டசபையில் குரல் கொடுத்திருக்கிறார், தமிழக-கேரள எல்லையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் ஒருவர். தன்னைத் தேர்ந்தெடுத்த பெரும்பான்மை கேரள மக்களுக்காக அவர் கேட்ட கேள்வி இது.இதேபோல், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக அங்குள்ள ஒரு மக்கள் பிரதிநிதி, அந்த மாநில சட்டசபையில் குரல் கொடுக்க முடியுமா என்பது அப்பாவித் தமிழனின் கேள்வி. செம்மொழி மாநாட்டில் இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டுமா, வேண்டாமா என்பது விவாதத்துக்குரியது. ஆனால், பக்கத்து மாநிலங்களில், பக்கத்து நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் பேசவும், அவர்களது குழந்தைகள் தமிழைக் கற்கவும், சாதகமான சூழல்களை ஏற்படுத்துவது பற்றி பேச வேண்டியது கட்டாயம்.இங்கே ஓணத்துக்கு உள்ளூர் விடுமுறை. அங்கே பொங்கலுக்கு (தமிழ்ப்புத்தாண்டு) விடுமுறை கேட்டால் பொங்கி எழுவார்கள். தமிழ் எழுதப்பட்ட வாசகத்தோடு, பெங்களூருவில் வலம் வரும் வாகனங்களுக்கு 'நித்ய கண்டம், பூரண ஆயுசு'. இதே நிலை தொடர்ந்தால்...பிற மாநிலங்களில் வாழும் பல லட்சம் தமிழர்கள், தமிழையும், தமிழர் என்பதையுமே மறந்து விடுவார்கள்; தமிழுக்கு மாநாடு எடுக்கும் தமிழக அரசு, பிற மாநிலங்களில் தமிழை தைரியமாக பேசுவதற்கான பாதுகாப்பையும், அதைக் கற்பதற்கான சூழழையும் உருவாக்க மாநாட்டில் உறுதி எடுக்க வேண்டும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »