E-paper   |   Sitemap   |   RSS
மே 11,2010,00:00

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் மேற்கொண்டுள்ளனர். 'மாநாடு பாதுகாப்பு திட்டம்' தயாரிப்பு<, ஒருங்கிணைப்பு பணிகளை கவனிக்கும் பொறுப்பு, வேலூர் டி.ஐ.ஜி.,தாமரைக்கண்ணனிடமும், சாலை போக்குவரத்து ஏற்பாடுகள், திருநெல்வேலி டி.ஐ.ஜி., சண்முக ராஜேஷ்வரனிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இரு நாட்களுக்கு முன் கோவை வந்த டி.ஐ.ஜி., தாமரைக்கண்ணன், மாநாடு பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் ஆலோசனை நடத்தினார். மாநாடு நிகழ்விடம் மற்றும் விருந்தினர் தங்குமிடங்களுக்கான பாதுகாப்பு, சாலை போக்குவரத்து வசதிகள், போலீஸ் கன்ட்ரோல் ரூம் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனை நடந்தது. தவிர, வெளிமாவட்டங்களில் இருந்து வரும் போலீசாருக்கான தங்குமிடங்கள், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் விவாதித்தனர். மாநாடு பாதுகாப்பு திட்டம் முழு அளவில் தயாரான பின், மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. அதன் பின், மாநாடு பாதுகாப்புக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் துவங்கும், என மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »