E-paper   |   Sitemap   |   RSS
மே 10,2010,00:00

உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் முதன்மையாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும், பிற மொழிகள் மூன்றாவதாகவும் இடம் பெற வேண்டும் என்று தொழிலாளர் துணை ஆணையர் அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். பல நிறுவனங்கள் இந்த வேண்டுகோளை பின்பற்றாததால், மீண்டும் வர்த்தகர் சங்கம், உணவு நிறுவன உரிமையாளர்கள் சங்கம், மில் உரிமையாளர்கள் சங்கம், சிறு வணிகர்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டம் நடத்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்களும் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்களை பெரிய அளவில் எழுதி ஒத்துழைக்க மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »