E-paper   |   Sitemap   |   RSS
மே 09,2010,00:00

செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, தமிழில் வனச்சட்டப் புத்தகங்களை அச்சடித்துத் தர வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருக்கிறது தமிழ்நாடு வன அலுவலர் சங்கம். சரியான தருணத்தில் வைக்கப்பட்டுள்ள சரியான கோரிக்கை. இதை ஒரே ஒரு துறையின் வேண்டுகோளாக அரசு புறம்தள்ளிவிடக்கூடாது. எல்லா அரசுத்துறை அலுவலர்களுடைய எதிர்பார்ப்பும் இதில் அடங்கியுள்ளது. மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் பல ஆயிரம் ஊழியர்களுக்கு அவரவர் துறை சார்ந்த சட்டங்கள் எதுவுமே தெரிவதில்லை. காரணம், அவை அனைத்தும் சாதாரண ஊழியருக்குப் புரியாத ஆங்கில மொழியில் இருப்பதுதான். உதாரணமாக, வனத்துக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைபவர்களை என்ன செய்ய வேண்டும் என்கிற அடிப்படையான தகவல் கூட, கீழ் மட்ட ஊழியருக்குத் தெரியாது; ஏனென்றால் அவருக்கு சட்டம் தெரியாது. அரசாணை, திட்ட அறிக்கை, நீதி மன்ற தீர்ப்பு, அரசுத் துறை படிவம் எதிலுமே தமிழைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது. தமிழில்தான் அதிகாரிகள் கையெழுத்துப் போட வேண்டுமென்று உத்தரவைக் கூட, பல அதிகாரிகள் கடை பிடிப்பதில்லை. ஆங்கிலம் புறக்கணிக்க வேண்டிய மொழி இல்லை; ஆனால், அது தமிழை ஏறி, மிதித்து ஆளுமை செலுத்துவதைத்தான் தமிழை சுவாசிப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பிரமாண்ட பந்தல், அமர்க்களமான அலங்கார வாகனங்கள், கவர்ந்திழுக்கும் கண்காட்சி...இவையெல்லாம் ஒரு மாநாடுக்கு அவசியம்தான். ஆனால், இவை செம்மொழித் தமிழுக்கு நிரந்தர பாதுகாப்பைத் தந்து விடாது. தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்; அதை அரசுத்துறைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »