E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கி.ஆ.பெ.விசுவநாதனார்
மே 09,2010,00:00

இந்தியை கட்டாய பாடமாகத் திணிக்க, அரசு முயன்ற போது அதனைத் தகர்த்தெறிய முன்னணியில் நின்றவர் கி.ஆ.பெ.விசுவநாதனார் (1899-1994). திருக்குறள் மேல் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு. திருக்குறள் ஒன்றே வாழ்வை வளமாக்கும் நூல் என்பதில் ஆணித்தரமான கருத்துடையவர். தமிழின் சிறப்பு, தமிழ்செசல்வம், திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள், திருக்குறளில் செசயல்திறன், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். 'தமிழர் புலவர் குழு' என்ற குழுவை தோற்றுவித்த பெருமைக்குரியவர். தற்பொழுது விசுவநாதனாரின் புதல்வி திருமதி மணிமேகலை கண்ணன் இப்புலவர் குழுவை திருச்சியில் நடத்தி வருகிறார். இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சசங்கம் இவருக்கு 'முத்தமிழ்க் காவலர்' என்னும் விருது வழங்கி பாராட்டியது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »