E-paper   |   Sitemap   |   RSS
மே 08,2010,00:00

கால'ணி' வெங்கடாசலம்...கால'னி'களை இங்கே கழற்றி வைக்கவும், வருக வருக என வ'ற'வேற்கிறோம், ராஜம் மருத்துவம'ணை', பல சரக்கு ம'லி'கை, திரும'ன' விழா....இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே; பொது இடங்களில் எங்கே பார்த்தாலும் இப்படித்தான் தமிழ் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் குறிப்பாக, செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் கோவையில் தமிழ் மட்டுமே தவறாக எழுதப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமின்றி தமிழக அரசு அலுவலகங்களிலும் கூட தமிழ் தவறாக எழுதப்படுவதுதான் வேதனை. அது தவறு என்று தெரிந்தும் திருத்தாமல் இருப்பது அதை விடக் கொடுமை.தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டுமென்று அவ்வப்போது அரசு அதிகாரிகள் அறிக்கை விடுகின்றனர். ஆனால், வைக்காவிட்டாலும் எந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஏதோ கட்டாயத்தமிழ் இருப்பதால், தட்டுத்தடுமாறியாவது இந்தத்தலைமுறை தமிழ் படிக்கிறது.தமிழைக்காக்க அக்கறையோடு மாநாடு நடத்தும் தமிழக அரசு, தமிழை சரியாக உச்சரிக்கவும், தவறின்றி எழுதவும், உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. தலை நிமிருமா தமிழ் வளர்ச்சித்துறை?


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »