E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அண்ணாமலை செட்டியார்
மே 08,2010,00:00

சிவ பக்தியையும், தமிழ்ப்பணியையும் தமது இரு கண்களாகக் கருதியவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் (1881-1948). தனியொருவராய் நின்று இயல் தமிழ் வளர்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும், இசைத் தமிழ் வளர்ச்சிக்காகப் தமிழிசைச் சங்கமும் கண்ட பெருமைக்குரியவர். இவரின் வாழ்வு நகமும், சதையும் போலத் தமிழோடு பின்னிப் பிணைந்தது. பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென விரும்பினார். ஏற்கனவே தமிழகத்தில் இருந்த சென்னைப் பல்கலையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம், தர வேண்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 1929ம் ஆண்டு நிறுவினார். முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் அண்ணாமலை செட்டியாரின் காலத்தில் மிகவும் நலிவுற்றிருந்தது. இதனை கருத்தில் கொண்டு 1943ம் ஆண்டு 'தமிழிசைச் சங்கம்' என்னும் அமைப்பினை உருவாக்கினார். இதற்கு தலைவராகவும் இவரே விளங்கினார். அண்ணாமலை செட்டியாரின் கொடை வன்மையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு 'சர்' என்னும் பட்டத்தை வழங்கியது.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »