E-paper   |   Sitemap   |   RSS
மே 07,2010,00:00

செம்மொழி மாநாடு நடக்கும் ஐந்து நாட்களிலும், ஊர்வலம், கண்காட்சி, பட்டிமன்றம், கவியரங்கம் என மக்களைக்கவர்ந்திழுக்கும் பல நிகழ்வுகள் அரங்கேற இருக்கின்றன. தலை நகரத்து மக்களை, தமிழ் கலைகளின் மீது காதல் கொள்ள வைத்த 'சங்கமம்' கலை நிகழ்ச்சிகளில் இடம் பெற்ற அதே குழுவினர், ஜூன் 20, 21, 22 ஆகிய 3 நாட்களில் நகரின் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை பரவசத்தில் மூழ்கடிக்கவுள்ளனர். பல்லாயிரக்கணக்கான இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த வேளையில், கொங்கு மண்ணிலுள்ள கலைஞர்களின் கனிவான கோரிக்கை, தங்களுக்கும் 'சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வேண்டுமென்பதே. ஜமாப், கூத்துக்கலை என இந்த மண்ணில் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற சில கலைகள் இருக்கின்றன. பிழைப்புக்கு வழி தராவிட்டாலும், இந்தக்கலைகளை பிழைக்க வைக்கிற கலைஞர்கள் நிறையப்பேர் இங்கிருக்கின்றனர். புகழ் பெற்ற, அணியாக இயங்குகிற கலைஞர்களை அழைத்து வந்து, மக்களை மகிழ்விப்பதில் தவறில்லை. அத்துடன், இங்குள்ள கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தால், மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் கிடைப்பதுடன், இந்தக் கலைஞர்களுக்கும் கவுரவம் கிடைக்கும். கனிமொழியின் கனிவுப் பார்வை இவர்கள் மீது திரும்புமா?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »