E-paper   |   Sitemap   |   RSS
மே 06,2010,00:00

செம்மொழித் தமிழுக்கு மாநாடு எடுக்கப்படும் கோவை நகரில், தமிழுக்கோ, தமிழுக்கு உலகப்புகழ் சேர்த்த அய்யன் திருவள்ளுவனுக்கோ ஓர் அடையாளமும் இல்லை. சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்யாகுமரியில் வள்ளுவருக்கு வானுயர சிலை, மதுரையில் தமிழன்னை சிலை...கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம் இருப்பது மட்டுமே ஓர் ஆறுதல்.அங்கேயும் தமிழ் வளர்ச்சிக்காக மெச்சிக்கொள்கிறாற்போல, எந்த முயற்சியும் நடப்பதில்லை என்பது அனுபவ வேதனை. கோவையில் மாநகராட்சி சார்பில் இருக்கும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்துக்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டுமென்று 3 ஆண்டுகளுக்கு முன்பே மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.அரசின் ஒப்புதலுக்குப் போன அந்த தீர்மானம், எங்கே போய் முடங்கிக்கிடக்கிறது என்பது ஆய்வுக்குரிய ஒன்று. அரசும் மறந்து விட்டது, இங்கே இருக்கும் ஆளும் கட்சியினரும் மறந்து விட்டார்கள். இன்றைக்கும் அது வெறும் மாநகராட்சி கலையரங்கமாக மட்டுமே பலகை தாங்கி நிற்கிறது.தமிழின் மீது பற்று இருக்கிறதோ இல்லையோ, முதல்வருக்கு வள்ளுவன் என்றால் ரொம்பப் பிடிக்குமென்று இங்கிருந்து ஆளும் கூட்டணி மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனுப்பிய அந்த கோரிக்கையே, அரசின் காதை எட்டவில்லை என்றால் தமிழைக்காக்க வேண்டுமென்று மற்றவர்கள் வைக்கும் மனுக்கள் எங்கே போகும்?.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »