E-paper   |   Sitemap   |   RSS
மே 05,2010,00:00

சென்னைக்கு அடுத்ததாக ஓரளவுக்கு கட்டமைப்பு வசதிகள், தங்குமிடங்கள், நல்ல குடிநீர், போக்குவரத்து வசதி...இத்யாதிகள். இவற்றோடு இந்த ஊரின் அமைதியான சூழல்; செம்மொழி மாநாட்டை நடத்த கோவையை அரசு தேர்வு செய்ய காரணங்கள் பல.குண்டு வெடிப்புக்குப் பின், பல வகையிலும் புறக்கணிக்கப்பட்ட இந்த நகரில்தான், இன்று பன்னாட்டு நிறுவனங்கள் பாசத்துடன் பாதம் பதிக்கின்றன. இங்குள்ள மக்களுக்கு அமைதியின் மீதுள்ள பற்றும், முன்னேற்றத்தின் மீதான ஆர்வமும்தான் இந்த அசாத்திய மாற்றத்துக்கான அடிப்படைக்காரணம்.எவ்வித அச்சுறுத்தலும், பாதுகாப்பு பிரச்னையுமில்லை என்று தெரிந்த பின்பே, சர்வதேசத்தலைவர்கள் பங்கேற்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு இங்கே நடத்தவுள்ளது. ஆனால், இப்போதும் குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி, இரவுகளில் கடைகளை மூடச்சொல்லி, நகரை முடக்குவது தொடர்கிறது.கோவையில், இரவு நேர பேருந்து போதிய அளவில் இருப்பதில்லை. பசியாற்றவோ, ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கவோ கூட நள்ளிரவில் கடை இருப்பதில்லை.ஒரு வேளை, மாநாட்டு நாட்களில் மட்டும் இரவு நேரக் கடைகளை அனுமதித்தால், அது கோவை மக்களை அவமதிப்பதாகும். இனி எப்போதும் இரவிலும் கடைகளை அனுமதித்து, அவற்றைக் கண்காணிக்க வேண்டியதே காவல்துறையின் கடமை.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »