E-paper   |   Sitemap   |   RSS
மே 04,2010,00:00

தங்கத்தமிழுக்கு கொங்கு மண்ணில் எடுக்கும் செம்மொழி விழாவில் பங்கேற்க, சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மண்ணிலிருந்தும், தென் மாவட்டங்களிலிருந்தும் அணி அணியாக மக்கள் திரண்டு வருவார்கள் என்பது நிச்சயம். பெரும்பாலானோர் வாடகை வாகனங்களில் வருவதற்கே வாய்ப்பு அதிகம்.இதே மாநாட்டில் தனி நபராக, குடும்பமாகப் பங்கேற்கும் ஆசையும், பல ஆயிரம் மக்களுக்கு இருக்கலாம். அவர்கள் ஒரு முறையாவது, கோவை சிங்காநல்லூர் மற்றும் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் விடுமுறை நாட்களில் குவியும் கூட்டத்தைப் பார்த்தால் அந்த ஆசையை மூட்டை கட்டி வைத்து விடுவர்.அத்தகைய நாட்களில் குறைந்த பட்சம், 10 ஆயிரம் பேராவது, இவ்விரு பேருந்து நிலையங்களிலும் குழந்தை, குட்டிகளுடன் ஒவ்வொரு பஸ்சையும் நோக்கி படையெடுத்துத் தோல்வியடைந்து, துவண்டு போய், இரவெல்லாம் சிக்கித் தவிக்கும் காட்சி, காணச்சகிக்காதது. கோவை மண்ணில் வசிக்கும் தென் மாவட்ட மக்களின் எண்ணிக்கை பல ஆயிரம். இவர்களுக்கு நாகர்கோவில் ரயிலை விட்டால், வேறு எந்த ரயிலும் இல்லை. அனைத்து மக்களும் நம்பியிருப்பது, அரசு பேருந்துகளை மட்டுமே. மாநாட்டை முன்னிட்டாவது இந்த பிரச்னைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மாநாட்டுக்காக மட்டும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யாமல், நிரந்தரமாகச் செய்தால் கொங்கு மண்டலத்தில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்கள் நிம்மதியடைவர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »