E-paper   |   Sitemap   |   RSS
மே 03,2010,00:00

கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, உலகளாவிய தமிழ்க்கவிதை போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தங்களது கவிதையை, ulagalaviakavithaipotti@gmail.compothuarangam@gmail.com என்ற இ-மெயில் முகவரிகளுக்கு, அனுப்பி வைக்கலாம்.போட்டியாளர்கள், 'சங்கத்தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் கவிதை எழுத வேண்டும். இப்போட்டியை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான பொது அரங்க நிகழ்ச்சி அமைப்புக்குழுவினர் நடத்துகின்றனர். வெற்றி பெறுவோருக்கு 3.2 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்.போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்; வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு பக்க அளவில், 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருக்கவேண்டும். மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம். 'போட்டியில் பங்கேற்க விரும்புவோர், மே 20ம் தேதிக்குள் கவிதைகளை இ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும்' என்று அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »