E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 18,2010,00:00

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் நடத்தப்படுவது அந்த நகருக்குக் கிடைத்த பெருமை. மரியாதைக்குரிய கொங்குத்தமிழ் பேசும் மண்ணில், தமிழுக்கு மரியாதை செலுத்தும் இந்த மாநாட்டுக்காக 300 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பது பெரும் வரப்பிரசாதம்.

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 72 சாலைகள், 60 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படுகின்றன. நகரிலுள்ள முக்கியச்சாலைகளை இணைக்கும் மூன்று இணைப்புச் சாலைகள் அமைக்க, 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கவுள்ள அவிநாசி சாலை, இதற்கு இணைச்சாலையான திருச்சி சாலை, இரண்டையும் இணைக்கும் பாரதியார் சாலை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் சாலைகளில் 55 கோடி ரூபாய் மதிப்பில் 'புதை மின் வடம்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. பூங்கா, நடைபாதை, சாலை சந்திப்பு மேம்படுத்தும் பணிகள், 24 கோடியே 82 லட்ச ரூபாய் செலவிலும், விமான நிலையச் சாலை அகலப்படுத்தும் பணி, நான்கு கோடி ரூபாய் மதிப்பிலும் நடக்கிறது. மொத்தம் 47 பூங்காக்கள் புதுப்பொலிவு அடைகின்றன; 18 இடங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்படுகிறது.

சுற்றுலா மாளிகைகளை மேம்படுத்த இரண்டு கோடியே 70 லட்ச ரூபாய், மாநகராட்சி திருமண மண்டபங்களை சீரமைக்க 6 கோடியே 87 லட்ச ரூபாய், நடைபாதை, நிழற்குடை மற்றும் தெருவிளக்கு அமைக்க 48 கோடி ரூபாய் என கோடிக் கணக்கில் நிதி கொட்டப்பட்டு பணிகள் நடக்கின்றன. மத்திய அரசு சார்பில், திருச்சி ரோடு 15 கோடி ரூபாய் மதிப்பில் அகலமாகி வருகிறது; மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயகன்பாளையம் வரை, 50 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாகிறது. ரயில்வே துறை சார்பிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »