E-paper   |   Sitemap   |   RSS
மே 01,2010,00:00

கோவையில் உலகத்தமிழ் மாநாடு என்று அறிவித்தபோது, அதற்கு இருந்த கால இடைவெளி வெறும் ஆறு மாதங்கள். அதையே உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடாக மாற்றி அறிவித்தபோது, இருந்த அவகாசம் 10 மாதங்கள். தமிழ் மாநாடு முழுமையாக, ஆரோக்கியத்தோடு பிரசவிப்பதற்காக எடுத்துக்கொண்ட காலமாக இருக்கலாம். ஆனால், திட்டங்களை நிறைவேற்ற இது மிகவும் குறுகிய கால இடைவெளி என்பதால், ஏதோ அவசர கதியில் மேற்பூச்சு வேலைகள் மட்டும் நடக்கின்றன. இதற்கே 300 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. இந்த மாநாட்டில் கோவை மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் பாக்கியம், செம்மொழிப் பூங்கா அறிவிப்பு மட்டுமே. சென்னை நகரில் கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், திட்டங்கள், தொழிற்சாலைகளை ஒப்பிட்டால் கோவைக்குக் கிடைத்திருப்பது சோளப்பொரி. காந்திபுரம் சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு, அரசு மருத்துவமனை எதிரில், ராமநாதபுரம் என பாலங்கள் தேவைப்படும் இடங்கள் கோவையில் ஏராளம் இருக்கின்றன. சென்னைக்கு மெட்ரோ ரயில், இங்கே ஒன்றுமே இல்லை; கூவத்தை சுத்தம் செய்ய, 1200 கோடி ரூபாய், இங்கே இருக்கும் நொய்யலுக்கு சாயக்கழிவு நீர் சங்கமிப்பது இலவசம். பல நூறு கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகம், கோவையில் பாழடைந்த கட்டடத்தில் கலெக்டர் அலுவலகம்... எடுத்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றன. ஏனிந்த பாரபட்சம்? மாநாட்டில் கோவைக்கு பல புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்தால் கோவை மக்கள் காட்டும் நன்றி, மிகப்பெரியதாயிருக்கும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »