E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 30,2010,00:00

ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் பேர் வருவர் என்பது கணிப்பு. சுற்று வட்டார மக்களைச் சேர்த்தால் குறைந்தபட்சம், கோவை செம்மொழி மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் குவியும் வாய்ப்புண்டு. மாநாடு மற்றும் கலை விழா நடக்கும் 8 நாட்களில் 5,000 மெட்ரிக் டன் குப்பை அதிகமாகச் சேரும் என்பது தோராயமான கணக்கு. இவற்றை அகற்றுவது பிரச்னையில்லை. தேவையில்லாத குப்பைகளைச் சேர விடாமல் இப்போதே திட்டமிடுவதே முக்கியம். உணவு, குடிநீர், தின்பண்டங்கள் இவற்றின் மூலம் தான் அதிகமாக குப்பைகள் சேரும். அதிலும், கோவையிலுள்ள ஓட்டல் நிறுவனங்கள் இதில் சாதனை படைப்பவை. ஐம்பது ரூபாய் கொடுத்து ஒரு 'பார்சல்' சாப்பாடு வாங்கினாலும், அதில் வாழை இலையை வாசத்துக்குக் கூட பார்க்கமுடியாது. உண்மையில், மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு வயிறார உணவு கொடுப்பதை விட, கல்லாவை நிரப்புவதற்கான முயற்சிகள் தான் இப்போது நடக்கின்றன. எனவே, உணவுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; மட்கும் பொருட்களில் 'பார்சல்' செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வினியோகிக்கும் பாட்டில்கள் அனைத்தையும் சேகரித்து, மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்பவும் அரசே உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சிகளை விட, இங்கே குவிந்த குப்பைகள் மட்டுமே, கோவை மக்களின் மனக்கண்களில் நிரந்தரமாய்த் தங்கி விடும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »