E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 29,2010,00:00

மொத்தம் 41 பூங்காக்கள் புதுப்பிக்கப்படுகின்றன; நடைபாதைகளில் பூங்கா அமைக்கப்படுகிறது; செயற்கைப் புல்வெளி, நீரூற்று அமைத்து, செடிகள் வைக்கப்பட்டு, பச்சை வர்ணம் பூசி நிற்கிறது வ.உ.சி. மைதானம்; நகரம் முழுவதும் 319 பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. இத்தனையும் நடப்பது கோவையில்... செம்மொழி மாநாட்டுக்காக கோவை நகரை அழகு படுத்த, அரசு எடுத்துள்ள முயற்சிகள் இவை. இந்த செயற்கைப் பூச்சுக்களால் அழகு வந்து விடுமா என்பதே கொங்குத் தமிழ்க் குடிமகன்களின் கேள்வி. இந்த வேலைகளைச் செய்வதற்கு முன்பே, இந்த மண்ணை அழகு படுத்த முயன்ற அமைப்புகள் ஏராளம். நொய்யலுக்கு மறு உயிர் தந்து, இங்குள்ள குளங்களை நிரப்பியது 'சிறுதுளி' அமைப்பின் பெரும் சாதனை. சுகாதாரமற்ற எத்தனையோ வீதிகளை சுத்தமாக்கி, மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தியது கோவை 'ராக்' அமைப்பு. நகரிலுள்ள பல ஆயிரம் மாணவ, மாணவியரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை சத்தமின்றி செய்து வருகிறது 'ஓசை'. மரங்கள் வளர்ப்பு, பூங்காக்கள் பராமரிப்பு, நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு என பல விதமாக இந்த நகரை அழகு படுத்த கை கொடுத்த அமைப்புகள் இன்னும் பல. இந்த அமைப்புகளுக்கு இந்த மாநாட்டுப் பணிகளில் எந்த விதமான பங்களிப்பையும் தராமல் புறக்கணித்திருக்கிறது அரசு. ஒரு வேளை இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளை, அரசு ஏற்படுத்திய குழுக்களில் சேர்த்திருந்தால் இன்றைக்கு நகரில் இத்தனை மரங்கள் பலி கொடுக்கப்பட்டிருக்காது. இப்போதும் கெட்டுப்போகவில்லை. மாநாட்டுக்காக ஒதுக்கிய பல நூறு கோடி நிதியில், கோவை நகரின் பசுமையை மீட்பதற்காக ஒரு தொகையை அரசு ஒதுக்கலாம். அந்த நிதியைக் கொண்டு மரங்கள் வளர்க்கும் பொறுப்பை, இந்த அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம். அவற்றை கண்காணிக்கும் கடமையை, வனத்துறைக்கு ஒதுக்கலாம். அரசு ஒதுக்கப்போவது நிதியையா? இந்த ஆலோசனைகளையா?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »