E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 28,2010,00:00

எல்லா மேம்பாட்டுப் பணியும் முடிந்த பின், மொத்தமாய் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. கோவை நகரில் எங்கு திரும்பினாலும் விளம்பர பேனர்களின் ஆதிக்கம். நகரின் முக்கியப் பகுதிகளில் ஏதோ காரணத்துக்காக வைக்கப்பட்டவை, மாதக்கணக்கில் அப்படியே ருக்கின்றன.அரசியல்வாதிகளின் பேனர்களுக்குப் போட்டியாக, வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பேனர்களைக் கட்டி, பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் திசை திருப்பி, தடுமாறி விழ வைக்கின்றன. பற்றாக்குறைக்கு கோவையில், எல்லா ரோடுகளும் இப்போது தோண்டப்பட்டு, குறுகிப்போயுள்ளன.இங்குதான் விளம்பரம் வைக்க வேண்டுமென்ற விதிமுறை எதுவுமின்றி, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அனுமதி பெறாமல், கண்ட இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிலும், மின் கம்பங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களே அதிகம்.சாலைத்தீவுகள், சாலைத்தடுப்புகள், மிச்சமிருக்கும் சாலையோர மரங்கள், பயன்பாட்டில் இல்லாத தொலைத்தொடர்பு கம்பங்கள்...இவை எதுவுமே இல்லாவிட்டால் எந்த இடத்திலும் கம்பங்களை நட்டு, விளம்பர பேனர்களைக் கட்டிக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கு, கோவையில் சமீபமாக அதிகரித்துள்ளது.இப்போதே இப்படி என்றால், செம்மொழி மாநாடு நெருங்கும் போது இன்னும் எத்தனை பேனர்கள், மக்கள் கண்களையும், பல கோடி ரூபாயில் மெருகேற்றப்பட்ட கோவையின் அழகையும் மறைக்கப் போகின்றனவோ தெரியவில்லை. விளம்பர ஆதிக்கத்துக்கு இன்றே முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »